×

2017ல் எடப்பாடி முதல்வரான பின்னர் தான் நீட் தேர்வு தமிழ்நாட்டிற்குள் வந்தது ேவலூரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி 21 பேர் உயிரிழப்புக்கு காரணமான முதல் குற்றவாளி

வேலூர், ஆக.22: 2017ல் எடப்பாடி முதல்வரான பின்னர் தான் நீட் தேர்வு தமிழ்நாட்டிற்குள் வந்தது. 21 பேர் உயிரிழப்புக்கு காரணம் இவர் தான் என்று வேலூரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
ேவலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பட்டமளிப்பு விழா மற்றும் வைட்டல் ேப திட்டம் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். எம்எல்ஏக்கள் ஏ.பி.நந்தகுமார், கார்த்திேகயன், அமலுவிஜயன், மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.பாபு, கல்லூரி முதல்வர் பாப்பாத்தி, மருத்துவ பணிகள் துணை இயக்குனர் பானுமதி, மருத்துவக்கல்வி இயக்குனர் சாந்திமலர், ஆர்டிஓ கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு புறநோயாளிகளுக்கான வைட்டல் பே திட்டம் மற்றும் புதிய மருத்துவ கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்த்துத்துறை மூலம் வைட்டல் பே என்ற திட்டம் புறநோயாளிகள் நுழைவு வாயில் பகுதியில், நோயாளிகளுக்கான உயரம், எடை, நாடித்துடிப்பு, சுவாசவிகிதம், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்டவை அளவிடப்பட்டு, மருத்துவரை பார்ப்பதற்கு முன்னதாகவே இந்த முடிவுகள் நோயாளிகளிடம் தரப்படும். இந்த பரிசோதனை விவரங்களுடனே சென்று சிகிச்சை பெற முடியும். இந்த வைட்டல் பே என்ற திட்டம் 36 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் செயல்படுத்தப்படும். இதனால் காலவிரையம் குறையும்.

அமைச்சர் உதயநிதி தலைமையில் நடந்த உண்ணாவிரத நிகழ்ச்சியில் கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என்று நீட் ெதாடர்பாகவும், மருத்துவக்கல்வி தொடர்பாகவும், ஒன்றிய அரசின் பாகுபாடு குறித்தும் பேசினார்கள். இது மாணவர்கள், மருத்துவர்களுக்கு கருத்து கேட்பு கூட்டம் போல இருந்து. ஆனால், எடப்பாடி நடத்திய மாநாட்டை பார்த்தோம். கூத்தும் கும்மாளமுமாக இருந்தது. அவர்கள் மாநாடு, எப்படி வேண்டுமானாலும் நடத்திக்கொள்ளலாம். ஆனால் இறுதியாக பேசியவர் சுகாதாரத்துறை குறித்து ெபாய் செய்தியை கூறி உள்ளார். தமிழ்நாட்டில் 1950ம் ஆண்டு சுகாதாரத்துறைக்கு ஒரே ஒரு பல் மருத்துவமனை இருந்தது. 73 ஆண்டுகளுக்கு பிறகு புதிய பல் மருத்துவக்கல்லூரிக்கு ஒன்றிய அரசிடம் அனுமதி பெற்றுள்ளோம். முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த மாவட்டத்திலேயே, அந்த பல் மருத்துவமனையை முதல்வர் திறந்து வைக்க உள்ளார்.

அதேபோல் மருத்துவத்துறை வரலாற்றில் 6 செவிலியர் கல்லூரிதான் இருந்தது. இப்போது ஒன்றிய அரசிடம் பேசி 11 செவிலியர்கள் கல்லூரிகள் புதியதாக வர உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்னால் மருத்துவ சேைவகளை பாராட்டியும், மருத்துவ கட்டமைப்புகளுக்கு ஒன்றிய அரசு, தேசிய தர உறுதி நிர்ணயதிட்ட சான்று வழங்கியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் மட்டும் கஸ்பா, பள்ளிகொண்டா, பள்ளிக்குப்பம், தொரப்பாடி, லட்சுமிபுரம், சத்துவாச்சாரி, திருவலம் ஆகிய 7 இடங்களில் இந்த மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு சான்றுகள் கிைடத்துள்ளது. மகப்பேறு அறுைவ சிகிச்சைகளின் தரம் போன்றவற்றிற்கு ஒன்றிய அரசு சான்று, கடந்த 2017ம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில் 77 சான்றுகள் கிடைத்துள்ளது. 6 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் 34 சான்றுகள் கிைடத்துள்ளது. கடந்த ஒரே ஆண்டில் 43 சான்றுகள் கிடைத்துள்ளது. வேலூர், குடியாத்தம் மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சான்று கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போதுள்ள மருத்துவ கட்டமைப்புக்கான பதில் இதுதான்.

கடந்த 15 நாட்களுக்கு முன்னால் டெல்லியில் ஒன்றிய அமைச்சர் விருது அளிக்க அழைத்தார்கள். அப்போது இந்தியாவிலேயே உறுப்புமாற்று தானம், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என்று கூறி, சிறந்த மாநிலம் என்ற விருது வழங்கினார்கள். உறுப்பு மாற்று தானத்தில் இந்தியாவிலேேய தமிழ்நாடு லீடராக உள்ளது என்றார்கள். இதையெல்லாம் எடப்பாடி தெரிந்துகொள்ள வேண்டும்.
நாங்கள் இந்த ஆட்சியில் மலை கிராமம், ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்ட தலைமை மருத்துவமனை என்று பட்டியல் தருகிேறாம். நீங்கள் 10 ஆண்டுகளாக செய்த பட்டியலையும், நாங்கள் இரண்டரை ஆண்டு இந்த துறை சார்பில் செய்த பட்டியலையும் நடுநிலையாளர்களிடம் கொடுத்து கேட்போம். நாங்கள் செய்ததில் 4ல் ஒரு பங்கு செய்தீர்கள் என்றால் எடப்பாடி சொல்வதை கேட்டுக்கொள்ளலாம். கடைநிலை தமிழனுக்கும் மருத்துவ சேவை என்ற நிலையில், மக்களை தேடி மருத்துவத்தில் 1 கோடியே 60 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளில் செய்த பணிகளை பட்டியல் போடுங்கள் விவாதிக்க தயாராக இருக்கிறோம். சித்த மருத்துவத்திற்கு என்று தயாரிக்கும் மருந்துகள், தற்போது கூட்டுறவு அங்காடிகளிலும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2016 வரை அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா இருந்தவரை நீட்டுக்கு விலக்கு இருந்தது. 2017ல் எடப்பாடி முதல்வரான பின்னர் தான் நீட் தேர்வு தமிழ்நாட்டிற்குள் வந்தது. நீட் உள்ளே வந்ததற்கு முழு காரணம் அவர்தான். அமைச்சர் உதயநிதி சொன்னதை போல 21 பேர் உயிரிழப்புக்கு காரணமானவர், முதல்குற்றவாளி என்றால் எடப்பாடி பழனிசாமி தான். இதை மறைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. தூங்குகிறவர்களை எழுப்பலாம். தூங்குகிறவர்களை போல நடிப்பவர்களை எழுப்ப முடியாது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து நடந்த பட்டமளிப்பு விழாவில் 101 மாணவர்களுக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்களை அமைச்சர் வழங்கினார். இறுதியாக பட்டம் பெற்ற மாணவர்கள் உறுதி மொழி ஏற்றுக்ெகாண்டனர்.

The post 2017ல் எடப்பாடி முதல்வரான பின்னர் தான் நீட் தேர்வு தமிழ்நாட்டிற்குள் வந்தது ேவலூரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி 21 பேர் உயிரிழப்புக்கு காரணமான முதல் குற்றவாளி appeared first on Dinakaran.

Tags : tamil nadu ,edapadi ,Subramanyan ,Edappadi ,Devalur ,
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து